» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உலக மனநல தின பேரணி : மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்பு!
வியாழன் 10, அக்டோபர் 2024 10:49:03 AM (IST)
தூத்துக்குடியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக அளவில் ஆண்டுதோறும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய அளவில் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் உலக மனநல தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழாவிற்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவம் மற்றும் செவிலியர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கலைவாணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மனநலத்துறை தலைவர் அப்துல் ரகுமான், மற்றும் மனநல மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.