» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சர் கீதாஜீவனுக்கு இந்து முன்னணி பாராட்டு!
வியாழன் 10, அக்டோபர் 2024 10:28:05 AM (IST)
தூத்துக்குடி பெருமாள் கோவில் திருப்பணிக்கு ரூ.4கோடி நிதி ஒதுக்க நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவனுக்கு இந்து முன்னனி பாராட்டு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி பிரசித்தி பெற்ற ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோவில் பாலாலய பணிகள் நடைபெற்று பல மாதங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கான நிதியும் பெறுவதில் தாமதம் பெற்ற நிலையில் நிர்வாகத்தினர் நீதிமன்றம் மூலம் நிதி பெற வேண்டி வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி திருக்கோவில் கும்பாபிஷேக பணிக்கு ரூபாய் 4 கோடி உடனடியாக ஒதுக்கீடு செய்ய உத்திரவிட்டதை தொடர்ந்து சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். மேலும், கும்பாபிஷேக பணியை விரைவாக முடித்து திருக்கோவிலின் கும்பாபிஷேக நாளை விரைவாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.