» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அக்.31க்குள் வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு!
புதன் 9, அக்டோபர் 2024 3:46:23 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி வரிகளை அக்.31க்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று ஆணையர் லி.மதுபாலன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025 ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை இம்மாத இறுதிக்குள் (31.10.2024 ) செலுத்தி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுமாறும் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தங்களின் பங்களிப்பினை வழங்கிடுமாறும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.