» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய அங்கன்வாடி மையங்கள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 9, அக்டோபர் 2024 3:23:13 PM (IST)

தூத்துக்குடியில் 2 புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 4வது வார்டு அம்பேத்கார் நகர், 47வது வார்டு லயன்ஸ் டவுண் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அமைச்சரை முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததை அடுத்து எல்.என்.டி நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் புதிய அங்கன்வாடி கட்டப்படுகிறது. இந்நிலையில், அங்கன்வாடி கட்டிட பணிகள் தொடங்குவதற்கான பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்ட செயலாளர்கள் சூசை அந்தோணி, சதீஷ்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், நாகேஸ்வரி, எல்.என்.டி நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ராஜசேகர், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், தி.மு.க அவை தலைவர் முனியசாமி வட்ட பிரதிநிதி பாஸ்கர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி பெர்ணான்டோ, மாவட்ட ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் (பொறுப்பு) காயத்ரி மற்றும் கருணா, மணி, அல்பர்ட் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக தலைவர் அண்ணாமலை பிரஸ் கிளப் நிர்வாகிகள் வரவேற்பு
புதன் 12, மார்ச் 2025 9:21:13 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி
புதன் 12, மார்ச் 2025 9:16:42 PM (IST)

தூத்துக்குடியில் 151பேருக்கு கணினி பட்டா: அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
புதன் 12, மார்ச் 2025 7:54:20 PM (IST)

மாணவர்களிடையே சாதிய உணர்வுகளை விதைக் கூடிய யாராக இருந்தாலும் நடவடிக்கை: ஆட்சியர்
புதன் 12, மார்ச் 2025 7:43:07 PM (IST)

கற்குவேல் அய்யனார் கோவிலில் ராஜகோபுரம் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!
புதன் 12, மார்ச் 2025 5:44:38 PM (IST)

பள்ளி மாணவரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: பெரியாரிய உணர்வாளர்கள்
புதன் 12, மார்ச் 2025 5:39:39 PM (IST)
