» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
ஞாயிறு 6, அக்டோபர் 2024 11:35:21 AM (IST)
தூத்துக்குடியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி போல்டன் புரம், 3வது தெருவைச் சேர்ந்தவர் ஸ்டாலின் மகன் தமிழரசன் (31), கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம்.
இதை அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மன வேதனை அடைந்த தமிழரசன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.