» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது டிராக்டர் மோதல்: வாலிபர் பரிதாப சாவு!
ஞாயிறு 6, அக்டோபர் 2024 11:29:06 AM (IST)
விளாத்திகுளம் அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரமேஷ் (25), இவர் விளாத்திகுளத்தில் இருந்து எப்போது வென்றானுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த டிராக்டர பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த வட மாநிலத்தை சேர்ந்த நபுகுல் இஸ்லாம் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.