» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவன் திடீர் மாயம்!
ஞாயிறு 6, அக்டோபர் 2024 11:19:53 AM (IST)
தூத்துக்குடி அருகே விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், மானூர் சுத்தமல்லியைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மகன் சுடலைமணி (15), தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அங்குள்ள சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளார்.
கடந்த மாதம் 6ம் தேதி சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். அவர் வீட்டுக்கும் செல்லவில்லை. எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.