» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை தாக்கிய கணவர் கைது!
ஞாயிறு 6, அக்டோபர் 2024 9:43:45 AM (IST)
கோவில்பட்டி அருகே மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வானரமுட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகையா (55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (50). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சண்முகையா தினமும் மதுகுடித்து விட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை மனைவி மாரியம்மாள் கண்டித்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சண்முகையா மாரியம்மாளை சரமாரியாக தாக்கினார். பலத்த காயமடைந்த மாரியம்மாள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து சண்முகையாவை கைது செய்தார்.