» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குலசை கடற்கரையில் பக்தர்கள் மோதல்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பு!
ஞாயிறு 6, அக்டோபர் 2024 9:34:47 AM (IST)
குலசேகரன்பட்டினம் கடற்கரையில் பக்தர்கள் மோதிக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, கோவில் கடற்கரையில் புனித நீர் எடுக்க சென்றனர். அப்போது இரு தரப்பு பக்தர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒருவரை ஒருவர் கம்பாலும், கைகளாலும் தாக்கி கொண்டனர்.
இதனைப் பார்த்த சக பக்தர்கள் கூச்சலிட்டனர். உடனே இரு தரப்பினரையும் அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர். கடற்கரையில் பக்தர்கள் இரு தரப்பாக மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. கோவிலுக்கு சாதி அடையாளத்துடன் பனியன்களை அணிந்து வரக்கூடாது என்று ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தினர். தொடர்ந்து கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
BalaOct 7, 2024 - 10:47:36 PM | Posted IP 162.1*****