» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விபத்தில் இறந்த சிறுவனின் கண்கண் தானம்
ஞாயிறு 6, அக்டோபர் 2024 9:08:42 AM (IST)
குலசேகரப்பட்டினம் அருகே விபத்தில் உயிரிழந்த 17வயது சிறுவனின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் இருந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சென்று திரும்பிய போது நடந்த விபத்தில் 3பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தில் ஆ.ஆதிமூலம் - பேச்சியம்மாள் தம்பதியரின் பலியான 17 வயதே ஆன மகன் ஆ.வடிவேலு என்ற சிறுவன் தான் இறந்தாலும் தனது கண்களை இந்த உலகிற்கு விட்டுச் சென்றுள்ளான்.
ஆம் வடிவேலு தனது கண்களை தானம் செய்துள்ளான். தங்கள் குழந்தையை இழந்த சோகமான நிலையிலும் தங்கள் மகன் வாயிலாக இருவருக்கு பார்வை கிடைக்கட்டும் என தனது மகன் கண்களை தானம் செய்ய சம்மதித்த ஆதிமூலம் தம்பதியினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.