» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகருக்குள் ஆர்ஐ அலுவலகம் : சமூக ஆர்வலர் கோரிக்கை!
சனி 5, அக்டோபர் 2024 8:52:56 AM (IST)
தூத்துக்குடி மாநகருக்குள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் ச. பாலா @ பாலசந்தர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகருக்குள் (Revenue Inspector Office) வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நகரவாசிகள் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலகங்களான தூத்துக்குடி பகுதி - 2, மீளவட்டான் பகுதி - 1 மற்றும் மீளவட்டன் பகுதி - 2 இம்மூன்று அலுவலகத்தில் உள்ள பொதுமக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால் தூத்துக்குடி மாநகர மக்கள் பெரும்பகுதி அடங்குவர்.
இந்த மூன்று அலுவலகமும் பொதுமக்களுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தும், தூத்துக்குடி தாலுகா அலுவலகமும் நகர்ப்புறத்தின் மத்திப்பகுதியில் அமைந்திருந்தாலும், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் / Ri ஆபீஸ்காக மட்டும் மக்கள் வெகு தொலைவில் செல்லக்கூடிய ஒரு கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இரண்டு மூன்று தடவைகள் அலைந்து அலைந்து பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
பழைய தாலுகா அலுவலகம் செயல்பட்ட போது மக்களுக்கு அது பெரிதாக தெரியவில்லை, தற்போது கிராம நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம் நகரின் மையப்பகுதியில் இருக்கும் போது வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மட்டும் அதற்காக தனியாக அலைய வேண்டும் என்று புலம்பி கொண்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் நலன் கருதி டூவிபுரம் புதிய தாலுகா அலுவலகத்திலேயே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களின் சார்பாக சமூக ஆர்வலர் ச. பாலா @ பாலசந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.