» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு நிதி ஒதுக்க முடிவு : ரவிக்குமார் எம்பி வரவேற்பு
சனி 5, அக்டோபர் 2024 8:40:24 AM (IST)
மத்திய அரசு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கூறினார்.
தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி எம் பி ரவிக்குமாருக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியதாவது: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த ஒரு புறம்போக்கு இடம் தொடர்பான பிரச்சனை கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது அதற்கு தீர்வு காண வலியுறுத்தி அந்தப் பகுதி பட்டியலிடமக்கள் தொடர்ந்து 72 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர் இந்த சம்பவம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் விரைவிலேயே இந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களும் அந்த பகுதிக்கு ஒரு சில வளர்ச்சி திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் எனவே அந்தப் பிரச்சனை சுகமாக தீர்க்கப்படும் மாவட்ட நிர்வாகம் அதற்குரிய நடவடிக்கைகளை தற்போது எடுத்திருக்கிறது
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு கூறியிருக்கிறது அதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்டிருக்கிறது முதற்கட்டத்தில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை அதற்காக நாடாளூ மன்றத்தில் கடுமையாக போராடினோம் நிதி அமைச்சர் காராக சொன்னார் அதை தமிழ்நாடு அரசு செய்யும் என்றார்
பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் தமிழக அரசின் வலியுறுத்தலை தொடர்ந்து வேறு வலி இல்லாமல் தற்போது இரண்டாம் கட்டத்திற்கு நிதி ஒதுக்குவதாக கூறியிருக்கிறார்கள் இரண்டாம் கட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதை வரவேற்கிறோம் தமிழக முதலமைச்சர் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வலியுறுத்தி உள்ளார் மெட்ரோ ரயில் திட்டம் மட்டுமல்ல பல்வேறு கோரிக்கைகள் உள்ளது அவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக பட்டியலினத்தைச் சேர்ந்த எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் பணம் சுமார் 1500 கோடி ரூபாய் ஒதுக்காமல் மத்திய அரசு உள்ளது இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான எஸ் சி எஸ் டி மாணவர்களின் வாழ்க்கை மிகப்பெரிய சிக்கலில் உள்ளது தமிழக அரசு வழங்க வேண்டிய 40 சதவீத பணத்தை வழங்கி விட்டார்கள் மத்திய அரசு கொடுக்கவேண்டிய அறுபது சதவீத பணம் சுமார் 1500 கோடி ரூபாயை கொடுக்காமல் வைத்து உள்ளார்கள்.
இது எப்படி உள்ளது என்றால் ஆயிரம் வருஷத்துக்கு முன்பு வர்ணாசிரமம் படி இவர்களெல்லாம் படிக்க கூடாது என்று வைத்திருந்தார்களோ அதே போன்று மனுதர்ம வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது ஏழை எளிய பட்டிலென எஸ்சி எஸ்டி மாணவர்களின் படிப்பில் மண்அள்ளி போடுகிறார்கள் இது தவறு இந்த பணத்தை வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு இந்த பணம் நிறுத்தப்பட்டது தலைவர் திருமாவளவன் நானும் போராடி தான் இந்த திட்டத்தை ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க வைத்தோம் சுமார் 45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு சுமார் 2 கோடி மாணவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்பெற்று வந்தார்கள் இப்போது திரும்பவும் அதை நிறுத்துகிற வேலையை பாஜக அரசு செய்கிறது மிக மிக மோசமானது கண்டிக்கத்தக்கது அந்த பணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்
மக்களுடைய உணவு என்பதில் தலையிடுவது சரியல்ல சில நீதிமன்றங்கள் நீதிபதிகளே கூறியிருக்கிறார்கள் யார் என்ன சாப்பிடுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தால் இந்த நாடு முன்னேறாது என்று வளர்ச்சியை பற்றி சிந்திக்க வேண்டும் நீதிமன்றங்களும் நீதி பரிபாலனம் வழங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் கடமை அதை அவர்கள் செய்யட்டும் கேண்டினில் இதை போடுங்கள் அதை போடுங்கள் என்று தீர்மானிப்பது நீதிமன்றங்களின் பணி அல்ல.
எனவே அவர்கள் இதை செய்யாமல் இருப்பது நல்லது. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து 32 க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர் உச்ச நீதிமன்றத்தில் பொதுவாக ஒரு தீர்ப்பு கூறிவிட்டால் பின்னர் அதே நீதிபதிகள் தான் பார்ப்பார்கள் எனவே சீராய்வு மனுவிலும் தீர்ப்பு தவறு என்று சொல்ல மாட்டார்கள் சீராய்வு மனுக்களை அவர்கள் எப்பொழுதுமே அனுமதித்து கிடையாது இப்பொழுதும் அனுமதிக்கவில்லை
ஆனால் அவர்கள் சொன்ன தீர்ப்பின் அடிப்படையிலே மாநில அரசுகள் சட்டம் இயற்றும்போது அல்லது ஏற்கனவே சட்டங்கள் இயற்றி இருக்கும்போது இந்த தீர்ப்பின் அடிப்படையிலே இனிமேல் அவைகள் எல்லாம் இனிமேல் அந்தந்த நீதிமன்றங்களில் வழக்கு தொடர வேண்டியதுதான் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான தீர்ப்பு அல்ல உச்சநீதிமன்ற தீர்ப்பு பிரச்சனையை இன்னும் அதிகப்படுத்துவதற்கான தீர்ப்பு தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு
எனவே தான் நாங்கள் கூறினோம் ஏற்கனவே கூறினோம் இந்த தீர்ப்பு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான சட்டத்தை உருவாக்கிய அம்பேத்காரின் நோக்கத்திற்கு எதிரான தீர்ப்பை வழங்கி உள்ளது என்று கூறினோம் நீதி அரசர்கள் அதை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை அதுக்கப்புறம் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கினார்கள் எதிர்த்து வழக்கு தொடர்ந்தோம் ரிவியூ பெட்டிஷன் போட்டோம் அதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இது மாதிரியான நீதிமன்றம் என்று சொல்லி இருக்கிற ஒரு உச்ச நீதிமன்றம் மக்களுக்கு எதிரான தீர்ப்புகள் சிலவற்றை வழங்கும்போது நீதித்துறை மீதான நம்பிக்கையே ஆட்டம் காண்பதாக ஆகிவிடுகிறது அது மாதிரியான தீர்ப்புகள் சில அவ்வப்போது வந்து விடுகிறது அது மாதிரியான தீர்ப்பு தான் இது என அவர் கூறினார்