» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வெள்ளி 4, அக்டோபர் 2024 9:24:55 PM (IST)

தூத்துக்குடியில், 500 ரூபாய்க்காக தந்தையை தாக்கி, மகனை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி ஊரணி ஒத்த வீடு பகுதியில் கணேசன் மற்றும் அவரது மகன் முத்துக்குமார் ஆகியோர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 12.11.2013 ஆம் ஆண்டு இரும்பு கடையில் கணேசன் மற்றும் அவரது மகன் முத்துக்குமார் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஊரணி ஒத்த வீடு பகுதியைச் சேர்ந்த முருகையா என்ற நபர் கணேசன் இடம் 500 ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளார்.

இதற்கு கணேசன் பணம் தர மறுக்கவே கணேசனை தாக்கி பிரச்சனை செய்துள்ளார். இது தொடர்ந்து தந்தையை முருகையா தாக்குவதை தொடர்ந்து உள்ளே இருந்து வந்த முத்துக்குமார் முருகையாவை தாக்கி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து முருகையா தனது நண்பர்களான கருப்பசாமி, சங்கர் ,மாரிமுத்து ஆகியோரை அழைத்துக் கொண்டு வந்து நான்கு பேரும் சேர்ந்து கடையில் இருந்த கணேசனை தாக்கியதுடன் முத்துக்குமாரை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் ஒன்றில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் 3வது குற்றவாளி சங்கர் இறந்துவிட்டார். இந்நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி தாண்டவன் இந்த வழக்கில் குற்றவாளிகள் முருகையா, கருப்பசாமி, மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory