» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக கவுன்சிலர் கைது!
வெள்ளி 4, அக்டோபர் 2024 8:41:05 AM (IST)
ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் முருகன் (58). இவர் சம்பவத்தன்று பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, 6ஆவது வார்டு கவுன்சிலரான பிச்சமுத்து என்ற சிவா, தனது வார்டில் மழைநீர் அகற்றும் பணி முறையாக செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த முருகன், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி வழக்குப் பதிவு செய்து பிச்சமுது என்ற சிவாவை (46) கைது செய்தனர்.