» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
வெள்ளி 4, அக்டோபர் 2024 8:17:28 AM (IST)
குலசேகரன்பட்டினத்தில் ரூ.1.12 கோடியில் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரன்பட்டினத்தில் என்டிடி குளோபல் டேட்டா சென்டர் கிளவுட் இன்ஃபிராஸ்ட்ரக்சர் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் ரூ.1.12 கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம்,உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் வே.கண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் நன்றி கூறினார்.