» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தூர்வாரும் பணி தீவிரம்!
வியாழன் 19, செப்டம்பர் 2024 5:33:10 PM (IST)
புதுக்கோட்டை பாலத்தின் கீழ் பகுதியில் வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ், மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கடந்த 10 வருடங்களில் மூன்று முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக வெள்ளத்தைத் தடுக்கவும் மற்றும் நீர்நிலைகளை காக்கவும், வீனஸ் வாட்டர் ஹீட்டர்ஸ் உற்பத்தி செய்யும் நிறுவனமான வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் (பி) லிட் நிறுவனம் தொடர்ந்து தங்களது சிஎஸ்ஆர் நிதியின் மூலம் நீர்நிலைகளை தூர்வாரும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த வருடமும் வீனஸ் நிறுவனத்துடன் மேலும் பல நிறுவனங்கள் கைக்கோர்த்து புதுக்கோட்டை பாலத்தின் அடியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, மற்றும் Exnora நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மக்கள் கருத்து
POMMU duraiSep 20, 2024 - 11:15:04 AM | Posted IP 162.1*****
Nandri
John britto AlexanderSep 19, 2024 - 07:27:41 PM | Posted IP 162.1*****
Nice 👍
PriyaSep 21, 2024 - 02:15:52 PM | Posted IP 162.1*****