» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முன்னாள் எம்.பி. அப்பாத்துரையின் புத்தக அறிமுக விழா.
வியாழன் 19, செப்டம்பர் 2024 4:58:20 PM (IST)
தூத்துக்குடியில், முன்னாள் எம்.பி. மு. அப்பாத்துரை எழுதிய 'எனது அரசியல் நினைவலைகள்' என்ற புத்தகத்தின் அறிமுக விழா நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1980 ஆம் ஆண்டு ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ வாகவும் 2004 ஆம் ஆண்டு தென்காசி நாடாளுமன்ற தொகுதி எம்.பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் மு.அப்பாத்துரை. இவர் தனது அரசியல் பயணம் பற்றி 'எனது அரசியல் நினைவலைகள்' என்ற நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் அறிமுக விழா தூத்துக்குடி சிட்டி டவர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வ.உ.சி.கல்விக் கழகச் செயலர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மூத்த செய்தியாளர் வசீகரன் வரவேற்புரையாற்றினார். விழா நோக்கஉரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் பேசினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், முன்னாள் அமைச்சர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி. சண்முகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே. பி. ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மீராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், சிஐடியூ நிர்வாகி ரசல், மதிமுக நக்கீரன், பேர்ல் ஷிப்பிங் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் எட்வின் சாமுவேல், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஸ்டீபன் ஜெபராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் எம்.பி. மு.அப்பாத்துரை ஏற்புரையாற்றினார்.
விழாவில் திமுக சார்பில் மாநகராட்சி உறுப்பினர் சுரேஷ்குமார், அரசு வழக்கறிஞர் மோகந்தாஸ் சாமுவேல், அ.இ.அ.தி.மு.க சார்பில் முன்னாள் நகர மன்ற தலைவர் ஹென்றி, கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், பெருமாள், திருச்சிற்றம்பல சிவா, காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஏ.டி.எஸ். அருள், ஐ.என்.டி.யூ.சி. சங்க தலைவர் ராஜ், மணி, முருகேசன், மாநகராட்சி உறுப்பினர் சந்திரபோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அர்ஜுனன், மாநகராட்சி உறுப்பினர் முத்துமாரி, மாநகரச் செயலாளர் முத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணராஜ், சேது, ஜீவா, பலவேசம், பாலன், வழக்கறிஞர் சந்திரசேகர், காளி, கொம்பையா, ரெட்டை முத்து, சாத்தூர் பழனி குமார், மதிமுக சார்பில் வீரபாண்டி செல்லச்சாமி, ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி பாலசந்திர பாரதி, வக்கீல் செங்குட்டுவன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்ந்த பாத்திமா பாபு, தொழிலதிபர்கள் பகவத்சிங், ஜெயகிருஷ்ணன், டி. ஏ. தெய்வநாயகம், நவராஜ், ராஜன், பாபு ஜெரால்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவினை மூத்த செய்தியாளர் வசீகரன் தொகுத்து வழங்கினார்.
மக்கள் கருத்து
saravananSep 19, 2024 - 05:57:54 PM | Posted IP 172.7*****
Appadhurai ayya kku paraiyar sarpaga vazthukal
தமிழ்ச்செல்வன்Sep 20, 2024 - 09:49:58 AM | Posted IP 172.7*****