» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் வால்வு தொட்டியால் போக்குவரத்து இடையூறு : அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு
வியாழன் 19, செப்டம்பர் 2024 11:38:25 AM (IST)
தூத்துக்குடியில் குடிநீர் வால்வு தொட்டியால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் சில பகுதிகளில் குடிநீர் வால்வு தொட்டியானது சாலை மட்டத்தை விட உயரமாக அமைக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார் வரப்பெற்றதையடுத்து இன்று அந்தோணியார் கோவில் - தந்தி ஆபிஸ் சாலை பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டதுடன், உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சலின், வட்டச் செயலாளர் கங்கா ராஜேஷ், வட்ட பிரதிநிதி திலகர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.