» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை : மனைவி பிரிந்து சென்றதால் சோகம்!
வியாழன் 19, செப்டம்பர் 2024 11:33:28 AM (IST)
எப்போதும் வென்றானில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் முத்துச்செல்வன் (28), கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கற்பூர மாரியம்மாள், கணவரிடம் தகராறு செய்துவிட்டு கடந்த 14ஆம் தேதி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இதையடுத்து முத்துச்செல்வன் மனைவியை அழைத்து வர சென்றபோது, அவர் வர மறுத்து விட்டாராம். இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து எப்போது வென்றான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.