» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்கள் மோதல்: ஆயுதங்களுடன் வந்ததால் பரபரப்பு!

வியாழன் 19, செப்டம்பர் 2024 10:33:48 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருதரப்பினர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த 8பேர் காெண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பள்ளி விடும் நேரத்தில் மாணவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். 

அதே சமயத்தில் போலீசார் ரோந்து சென்றதால் ஆயுதங்களுடன் வந்த கும்பல் தப்பிச்செல்ல முயன்றுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த கும்பலை மடக்கிபிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கல்வி கற்க புத்தகங்களை சுமக்க வேண்டிய மாணவர்கள் ஆயுதங்களை ஏந்துவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், உரிய நேரத்தில் காவல்துறையினர் ரோந்து சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. காவல் துறையினரின் துரித நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.  


மக்கள் கருத்து

RAYAPPANSep 21, 2024 - 09:05:56 PM | Posted IP 162.1*****

Entha school nu pottathana theriyum

ராஜாராம்Sep 19, 2024 - 10:51:21 AM | Posted IP 162.1*****

காவல்துறை செயல்பாடு திருப்தியாக உள்ளது. நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital






Thoothukudi Business Directory