» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய பாலங்கள் கட்டப்படும் : முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேச்சு!

வியாழன் 19, செப்டம்பர் 2024 10:09:29 AM (IST)



தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தபின் தூத்துக்குடியில் புதிய பாலங்கள் கட்டப்படும் என்று முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினாா்.
 
தூத்துக்குடியில் அண்ணா 116வது பிறந்தநாளையொட்டி டூவிபுரம் 5வது தெருவில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் நட்டார்முத்து, தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், துணைச் செயலாளர் செண்பகச் செல்வன், பகுதி ஜெ பேரவை செயலாளர் சுடலைமணி, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிாிவு இணைச் செயலாளரும் மாநகராட்சி எதிர்கட்சி கொறடாவுமான வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட ஜெ பேரவை துணைச்செயலாளர் மாாியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனா். பகுதி செயலாளர் முருகன், வரவேற்புரையாற்றினார். 

கூட்டத்தில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் பேசுகையில் "அதிமுக ஆட்சியில் இந்த தொகுதியில் செய்த பணிகள் ஏராளம் உண்டு அதில் குறிப்பாக முதல் குடிநீர் திட்டத்தை குரூஸ்பா்னாந்தும் இரண்டாவது திட்டத்தை எம்.ஜி.ஆரும் 3ம் திட்டம் 4ம் திட்டத்தில் 284 கோடி ஓதுக்கீடு செய்து அதன் மூலம் குடிதண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது. இதனால் 20 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை வராது. 

2011 தேர்தலின்போது விவிடி மேம்பாலம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் ஜெயலலிதா கூறினார். அதன்பின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதின் காரணமாக அந்த பணி தொடராமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதில் அக்கறை செலுத்தாமல் திமுக அரசு இருப்பது மக்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது. நான்காம் இரயில்வே கேட் பகுதியிலும் ஓரு மேம்பாலம் அமைத்திருக்கலாம் இரண்டையும் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தபின் நிறைவேற்றும். 

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முழுமையான ஆதரவை எம்.ஜி.ஆர் வழங்கி தமிழர்களின் நலனை பாதுகாத்தாா். தமிழகத்தில் பலருக்கும் டாஸ்மாக் ஆலை உள்ளது. அதே போல் சசிகலாவுக்கும் உள்ளது. 7.5 சதவீத இட ஓதுக்கீட்டின் படி அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பை மேற்கொண்டதின் மூலம் 3442 குடும்பங்கள் மகிழ்ச்சியாகவுள்ளன. 

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி வேனுமா வேண்டாமா என்று எழப்பட்ட கேள்வியில் தமிழக மக்கள் ராகுல்காந்தி வேண்டும் என்றுதான் வாக்களித்துள்ளனர். 2026ம் ஆண்டு தேர்தல் வெற்றி ஓன்றுதான் எங்களுக்கு குறிக்கோள் என்று பேசினார். 

முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால், தலைமை பேச்சாளர் கணபதி, உள்பட பலர் பேசினார்கள். கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினருமான வக்கீல் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயகம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் தனராஜ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலாசந்திரன், ஜெ பேரவை இணைச்செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் டைகர்சிவா, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்கள் முருகன், சத்யாலட்சுமணன், வட்டச்செயலாளர்கள் சொக்கலிங்கம், சுப்பிரமணி, உலகநாதன், பூக்கடை வேலு, மனோகர்மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகுதி செயலாளர் சேவியர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிSep 19, 2024 - 05:26:19 PM | Posted IP 172.7*****

இதுல பெரிய காமெடி என்னன்னா 2011 முதல் 2021 வரை அதிமுக அரசுதான். ஆனால் இந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சி கிடப்பில் போட்டுவிட்டதாம்

kannanSep 19, 2024 - 12:53:01 PM | Posted IP 162.1*****

mothalla byepassla pora bussellaam pudhukottai oorukkulla varramathiri seyyunga sir.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory