» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பயிர் காப்பீடு முறையாக வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை!
புதன் 18, செப்டம்பர் 2024 3:33:09 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பெய்த மழை வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது இந்நிலையில் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிறுவனம் உரிய இழப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதுடன் ஒரு குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கியுள்ளது
பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு மூலம் ரூபாய் 8000 முதல் 9 ஆயிரம் வரை வழங்க வேண்டும் மேலும் காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 14 ஏக்கருக்கு ரூபாய் 80 மற்றும் ரூபாய் 50 ஆகியவை பயிர் காப்பீடு திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பயிர் காப்பீடு திட்டத்தில் நடைபெறும் குளறுபடி மற்றும் தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள் மற்றும் மாவட்டச் செயலாளர் புவிராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகளை திரட்டி ஆட்சியர் அலுவலகம் செயல்படாத அளவிற்கு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
S.k@ruppasamySep 19, 2024 - 09:08:17 PM | Posted IP 162.1*****