» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல்: மாநகராட்சி சார்பில் மேயர் கோரிக்கை!
புதன் 18, செப்டம்பர் 2024 12:48:20 PM (IST)
தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல் அமைக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து காெண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கூறுகையில், "பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் ஒரு சில தவிர்த்து, அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், குறுகலான சந்துகளில் விரைவில் சாலைப் பணிகள் நடைபெறும்.
தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல் அமைக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். துறைமுக சபை பூங்கா மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த பூங்காவை சென்னை மெரினா போல மாற்றும் வகையில், ரூ.8 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும். பொதுமக்கள் பாலீத்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துனிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஓய்வூதியர் சங்கத் தலைவர் மாடசாமி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றதற்காக மேயருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார். மேலும், புதிய மாநகரட்சி அலுவலகம் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபோல் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்கள் மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி தியாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரிய கீதா, தனலட்சுமி, எடின்டா, மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
JayaretnakumarSep 20, 2024 - 01:38:29 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் முன்னால் உள்ள சாலையை ஒரு வழி சாலையாக மாற்ற வேண்டும்.ரயில்வரும் நேரங்களில் போக்கு வரத்து போலீசார் நிறுத்தப் பட வேண்டும்.
RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINSep 20, 2024 - 12:58:33 PM | Posted IP 172.7*****
மைசூரு தூத்துக்குடி விரைவு ரயிலை இரு மார்க்கத்திலும் தூத்துக்குடி மேலூர் ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
BalamuruganSep 19, 2024 - 08:29:32 PM | Posted IP 172.7*****
எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும் மக்கள் கருத்தை கேட்டு அடுத்த 50 ஆண்டுகளில் தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு ஏற்றார் போல் செயல்படுத்தவேண்டும். இல்லையெனில் பக்கிள் ஓடையை அகலபடுத்தாமல் இருந்த அளவை சுருக்கி வடிகால் அமைத்ததால் தான் கடந்த வெள்ள சேதம் உயிரிழப்பு ஒவ்வொரு வீட்டினுள்ளும் தண்ணீர் புகுந்து பிரிட்ஜ், வாஷிங்மிஷின்,தண்ணீர்மோட்டார், கட்டில்,மெத்தை, சோபா, கிரைண்டர்,துணிமணிகள்,பாடபுத்தகங்கள்,இருசக்கர, நான்ங்குசக்கர வாகனங்கள் பாழாய் போய் மக்களுக்கு கோடிகணக்கில் நட்டம் ஏற்பட்டதுதான் மிச்சம், ஆனால் வெள்ளம் கடலில் போய் வடியக்கூடிய ஓடையை சுருக்கி சாலைபோட்டு வாகனம் நல்லா போதுன்னு விட்டுட்டாங்க ஆனா 2023 வெள்ளம் பக்கிள் ஓடையில் செல்ல வழியில்லாமல் அனைத்து தெருக்கள்வழியாக கடலுக்கு பாயதுவங்கிவிட்டது இதனால் தெருக்களில் வாகனத்திற்கு பதில் தண்ணீரில் படகை ஓட்டவேண்டியதாயிற்று பக்கிள் ஓடையை அமைத்தவர் வெள்ளைகாரர் அவர் பிரவீனா நீக்கிஙககோங்க ஆனா ஓடையயை இப்படி குறுகலாக்காதிர்கள் வாகனம் செல்லும் சாலைகளை இப்ப எட்டுவழி பத்துவழி சாலைனு அமைக்கிற அரசு வெள்ளம் செல்ல இருந்த ஓருவழியை அப்படியே வைத்து மக்களின் உயிரையும் உடமைகளையும் காப்பாற்றுங்கள்.
பி.கண்ணாSep 19, 2024 - 04:46:38 AM | Posted IP 172.7*****
மாநகரச்சி மேயர் பொதுமக்கள் நலனை சார்ந்து நடப்பது இல்லை எல்லாமே வியாபாரிகள் நலனை சார்ந்தே இருக்கிறது எல்லா ரோடுகளிலும் நடமேடையில் வியாபாரிகளின் விபாரமே ஆக்கிரமித்து பொதுமக்கள் நடப்பதற்க்கே பாதைகள் இல்லாமல் நடுரோடுகளில் நடமாட வேண்டிய கட்டாயமக உள்ளது இதனால் பொதுமக்கள் பல விபத்துகள் நடப்பது தொடர்கதையக உள்ளது குறிப்பாக பழைய பஸ்நிலையம் அருகே காய்கரிமார்கெட் பகுதியில் கண்கூடாக பார்பது எழிது இதல்லாம் மேயருக்கு தெரியாதா அல்லது வாக்க்குக்காக இனம் சார்ந்து செய்கிறார
AyyappanSep 20, 2024 - 07:39:54 PM | Posted IP 172.7*****