» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் செப்.20ல் திமுக மாணவர் அணி நேர்காணல் : அமைச்சர் கீதா ஜீவன் அழைப்பு
புதன் 18, செப்டம்பர் 2024 12:08:26 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 20ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது என்று வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கழக ஒருங்கிணைப்புக் குழு ஆய்வுக் கூட்டத்தில் மாநில இளைஞரணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், தி.மு.கழக மாணவர் அணியின் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அளவில் மாணவர் அணிக்கு நிர்வாகிகளை நேர்காணல் மூலம் தேர்வு செய்திட கழக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்கள்.
அவரது அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்க் கழக அளவில் மாணவர் அணி நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான நேர்காணல் வருகிற 20.08.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
நகரம், ஒன்றியம், பகுதி, பேரூர் கழக அளவில் மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பதவிக்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பு (அல்லது) பட்டயபடிப்பு படித்திருக்க வேண்டும். கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்களும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்க் கழக அளவில் மாணவர் அணி அமைப்பாளர் ஒருவரும், துணை அமைப்பாளர்களாக 5 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் ஒரு துணை அமைப்பாளர் மகளிராகவும், ஒரு துணை அமைப்பாளர் கல்லூரி அல்லது பட்டய படிப்பு படித்து கொண்டிருப்பராகவும் இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட விதிமுறைகளின்படி நடைபெறும் மாணவர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணலில் சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழகங்களுக்கு உட்பட்ட மாணவரணி தோழர்கள் கலந்து கொள்ளவும் அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் செய்திடவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
NAAN THAANSep 19, 2024 - 11:08:48 AM | Posted IP 162.1*****
MAANAVAR ANI AAH...
PADIKURA PASANGALUKU ETHUKU DA KACHI, ARASIYAL ELLAM,
o அப்படியாSep 19, 2024 - 06:44:04 PM | Posted IP 172.7*****