» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரபல நகைக்கடையில் ஷட்டர் லாக் ஆனதால் சிக்கிய ஊழியர்கள், பொதுமக்கள் மீட்பு!
புதன் 18, செப்டம்பர் 2024 11:59:33 AM (IST)
தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் ஷட்டர் லாக் ஆனதால் கடைக்குள் சிக்கிய பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி., ரோட்டில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் நேற்று இரவு ஹைட்ராலிக் க்ளோசர் கட்டாகி ஷட்டர் மூடியது. இதனால் கடைக்குள் இருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட உதவி மாவட்ட அலுவலர் இ.ராஜூ தலைமையில் தூத்துக்குடி நிலைய சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து த.முருகையா மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்து ஷட்டரை உடைத்து அதில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
மக்கள் கருத்து
SEESEESep 18, 2024 - 03:39:32 PM | Posted IP 172.7*****
கடை பெயர் போட்டிருக்குதே ? திரும்ப நல்ல பாருங்க ....(((தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி., ரோட்டில் உள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ்)))
ThangaselvamSep 18, 2024 - 12:11:23 PM | Posted IP 162.1*****
கடைக்கு பேர் எல்லாம் கிடையாதா
NAAN THAANSep 19, 2024 - 11:07:10 AM | Posted IP 172.7*****