» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி-சென்னை இடையே பகல் நேர நேரடி ரயில் : பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை
புதன் 18, செப்டம்பர் 2024 8:06:16 AM (IST)
தூத்துக்குடி - சென்னை இடையே பகல் நேர நேரடி ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற சங்க மகாசபைக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் ஏ. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். செயலர் மா. பிரமநாயகம் பேசினார். பொருளாளர் வே. லெட்சுமணன் அறிக்கை வாசித்தார்.
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும். தூத்துக்குடி- பாலக்காடு ‘பாலருவி’ விரைவு ரயிலில் தலா ஒரு 3 அடுக்கு, 2 அடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், ஓர் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியை கூடுதலாக இணைக்க வேண்டும். தூத்துக்குடி- சென்னை இடையே பகல் நேர நேரடி ரயில் இயக்க வேண்டும்.
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் மைசூர் விரைவு ரயில், மேட்டுப்பாளையம் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், ஓஹா விரைவு ரயில்கள் நின்றுசெல்ல வேண்டும். தூத்துக்குடி- திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி -காரைக்குடி, காரைக்குடி- விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர்களை ரயில்கள் செல்லும் நேரத்தில் இயக்க வேண்டும். தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளின் வசதிக்காக அதிகாலையில் புதிய, பழைய பேருந்து நிலையங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், துணைத் தலைவர் ஹெச். மோகன், துணைச் செயலர் எஸ். அந்தோணி முத்துராஜா, நிர்வாகச் செயலர் ஜே.ஏ.என். ஆனந்தன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
P..RajendranSep 18, 2024 - 10:07:16 PM | Posted IP 172.7*****
ஏழைகளுக்கு.ஏற்றபடி..குறைவான.கட்டணத்தில்.ரயில்.பிரயாணம்அமைய.வேண்டும்..
சுரேஷ்குமார்Sep 18, 2024 - 11:18:09 AM | Posted IP 172.7*****
தூத்துக்குடி காரைக்குடி மற்றும் பல இணைப்பு ரயில்கள் அவசியம் தேவை
ஜான் ரட்சண்யம்Sep 18, 2024 - 11:13:44 AM | Posted IP 162.1*****
பகல் நேர சென்னை ரயில் மிக பயனுள்ளதாக இருக்கும் காலை 7 மணி வாக்கில் புறப்பட்டால் பக்கத்து கிராம மக்கள் பேருந்துகளில் வந்து சேர வசதியாக இருக்கும் மாலை 5 மணிக்கு சென்னை சேர்ந்தால் மறு மார்க்கத்தில் வைகை போல திருச்சி வரை இயக்கலாம். ஒருநாளில் 980 கி மீ பயணிப்பதால் வருமானம் நல்ல அளவில் இருக்கும்.
இதன் இணை ரயில் விடியற் காலை திருச்சியில் புறப்பட்டு சென்னை வந்து மதியம் 11.30 to 12க்கு புறப்பட்டு 10 மணிக்கு முன் தூத்துக்குடி வந்தால் பேருந்துகளில் ஊர்களுக்கு போய்விடலாம் நமக்கு வந்தே பாரத் வேண்டாம்.
அனைத்து மக்களும் பயணம் செய்யக் கூடிய சாதா ரயிலே போதும். குளிர் சாதன chair car 5, 6 இருக்கட்டும் முயற்சிகளுக்கு நன்றி
M.Luthfullah Khan ,ChennaiSep 19, 2024 - 10:28:26 PM | Posted IP 172.7*****