» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுக விழாவில் கெட்டுப்போன உணவு விநியோகம்: பொதுமக்கள் அதிருப்தி!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 12:57:03 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் துவக்க விழாவில் கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புதிய சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மேலும், ரூ.485.67 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், கனிமொழி எம்பி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை செயலா் டி.கே. ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி. மதுபாலன், துறைமுக ஆணைய தலைவா் சுசந்த குமாா் புரோஹித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாப்பிட முடியாத வகையில் இருந்த அந்த உணவு பொட்டலங்கள் அனைத்து வீணடிக்கப்பட்டு சாலையில் வீசப்பட்டு கிடந்தது. இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பல நூறுகோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இவ்விழாவில் மக்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

ராஜாSep 18, 2024 - 02:46:46 PM | Posted IP 172.7*****

பள்ளி குழந்தைகள் ஊழியர்கள், அதிகாரிகள் 700 பேருக்கு சாப்பிட முடியவில்லை.

VINCENT JAYAKUMAR JSep 17, 2024 - 11:38:09 PM | Posted IP 162.1*****

இந்திய பிரதமர் நரேந்திரன் மோடி தனது குஜராத் நண்பர் தொழில் செய்ய தூத்துக்குடி துறைமுகத்தை தாரை வார்த்து கொடுத்தார் என்ற செய்தியை மிஞ்சி நிற்கிறது கெட்டுப் போன உணவு செய்தி

ada naan thaanSep 17, 2024 - 05:49:51 PM | Posted IP 162.1*****

Food safety Dept is only roaming and licking the road side food only..

ஆமாம்Sep 17, 2024 - 03:55:42 PM | Posted IP 162.1*****

இப்போ இருக்கும் சில அரசு அதிகாரிகள் சரியில்லை எல்லாம் திமிரு

ராஜாராம்Sep 17, 2024 - 01:38:30 PM | Posted IP 162.1*****

ஊழல் பெருகி விட்டது. திமுக அதிகரிகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory