» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 17, செப்டம்பர் 2024 9:12:57 AM (IST)
தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ராமர் (27). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி சாரதா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவரது மனைவி கடந்த 1 மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு பெற்றோர் வீடான கோரம்பள்ளம் அய்யனடைப்பு கிராமத்திற்கு சென்று விட்டார்.
தனது மனைவியை சேர்த்து வைக்கும்படி அடிக்கடி மாமனார் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார் அங்கு மனைவியிடம் பேச விடாமல் தடுத்து அனுப்பியுள்ளனர். மேலும், மனைவியின் குடும்பத்தினர் ராமர் மீது அடிக்கடி குடித்துவிட்டு வந்து பிரச்சினை செய்வதாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை மனைவியிடம் சேர்த்து வைக்க வேண்டும் என பெற்றோரிடம் கூறிக் கொண்டே இருந்த ராமர் வீட்டின் மாடி அறைக்கு சென்றுள்ளார்.
பின்னர் குடும்பத்தினர் சாப்பிட வர சொல்லி அழைக்க சென்ற போது பேனில் சேலையால் தூக்குபோட்டு தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
YaliniSep 18, 2024 - 02:35:18 PM | Posted IP 162.1*****