» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு: த.வெள்ளையன் மறைவுக்கு வணிகர்கள் அஞ்சலி!

வியாழன் 12, செப்டம்பர் 2024 10:14:59 AM (IST)

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் இறுதி அஞ்சலியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவர் தமிழகத்தில் முதன் முதலில் வியாபாரிகளை ஒன்றிணைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் பேரவை என்ற அமைப்பை தொடங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளையும் ஒன்றிணைத்து வியாபாரிகளின் நலனுக்காக பாடுபட்டவர்.

இவர் உடல் நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவரது உடல் சொந்த கிராமமான திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதையொட்டி இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வணிகர்கள்  தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர்,ஏரல், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் 40 ஆயிரம் கடைகளை  அடைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்


மக்கள் கருத்து

TUTY MAKKALSep 14, 2024 - 10:16:53 AM | Posted IP 162.1*****

நல்ல மனிதர்.

Thirusangu alagarsamySep 12, 2024 - 11:32:53 PM | Posted IP 162.1*****

த வெள்ளையன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனதார பிராத்திக்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory