» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.56.44 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!

புதன் 11, செப்டம்பர் 2024 7:53:07 PM (IST)



வல்லக்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்  69 பயனாளிகளுக்கு ரூ. 56,44,873 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம், வல்லக்குளம் கிராமத்தில் இன்று (11.09.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வருவாய்த்துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், கூட்டுறவுத்துறை மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை போன்ற அரசுத்துறைகள் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.56,44,873 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  பேசும் போது தெரிவித்ததாவது:- மக்கள் தொடர்பு முகாம் என்பது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக 1990 ஆண்டுகளிலிருந்து தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கக்கூடிய ஒரு முகாம். மக்களின் குறைகளை அறிந்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்காக பல்வேறு முன்மாதிரியான திட்டங்கள் அதாவது மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. 

இத்திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி திட்டமாகத்தான் இந்த மக்கள் தொடர்பு முகாம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமத்தைத் தேர்வு செய்து அக்கிராமத்தில் உள்ள மக்களை அரசு அலுவலர்கள் நேரடியாக சந்தித்து அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்துமட்டுமல்லாமல் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றார்போல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் வகுக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 

இந்த பகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் அரசு வழங்கக்கூடிய பல்வேறு திட்டங்களில் பயன்பெற வேண்டும். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவரும்  தமிழ்நாடு முதலமைச்சர்  அத்துறை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால் வல்லக்குளம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் இருப்பின்  அனைவரும் அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தில் பயன்பெறுபவராக இருக்க வேண்டும். அதனை ஊராட்சி மன்றத்தலைவர்  உறுதிப்படுத்த வேண்டும். இம்முகாமில் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்களுக்கான தீர்வை விரைந்து வழங்க வேண்டும் அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த மக்கள் தொடர்பு முகாம்களில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு துறைகளில் இருக்கக்கூடிய திட்டங்களின் விழ்ப்புணர்வை தெரிந்தால் தான் துறைச்சார்ந்த திட்டங்களை பெறமுடியும். இந்த முகாம்களில் அனைத்துத்துறைகளும் திட்டங்களை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். 
 
அந்ததந்த கிராமப்புற பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை எடுத்து சொல்லி அதன் பயன்களை தெரியபடுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு கல்வித்துறை மூலமாக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கும் பல்வேற சலுகைகள் உள்ளது. பெற்றோர்கள் உங்களுடைய குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து அவர்களுடைய எதிர்காலத்தில்  அவர்களுடைய வாழ்க்கையில் உயர்ந்த நிலைலையை அடைவதற்கான நிலைமை கல்வியின் மூலமாக தான் கிடைக்கும்.

பிறந்த இழம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து என்பது மிகவும் அவசியம். அப்போதுதான் உடல் வளர்ச்சி மட்டும் இல்லாமல் அவர்களுடைய மனவளர்ச்சி முழுமையாக நிறைவடையும் அப்போது தான் எதிர்காலத்தில் ஒரு எந்த நோய் இல்லாமல் அனைத்து பணிகளையும் செய்யக்கூடிய அளவிற்கு ஆரோக்கியம் கிடைக்கும். ஆகவே உங்கள் அருகாமையில் இருக்கக்கூடிய அங்கன்வாடியில் உங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலமாக வழங்கக்கூடிய அனைத்து தடுப்பூசிகளும் போடுவதற்கான ஒத்துழைப்பை நீங்கள் கொடுக்க வேண்டும். 

உங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களான மகளிர் திட்டம் மூலமாகவும், மாவட்ட தொழில் மையம் வழங்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் மூலமாகவும், தாட்கோ மூலமாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமகவும், ஆதிததிராவிடர் நலத்துறை மூலமாகவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுத்துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும், திட்டங்களின் பயன்கள் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் கருத்துக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது அதனை அனைவரும் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத்,  தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ.அமிர்தராஜ், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னா சங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், வல்லக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கமலம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory