» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விவிடி சிக்னல் மேம்பால பணியை விரைவில் தொடங்க வேண்டும்: தமாகா தீர்மானம்
புதன் 11, செப்டம்பர் 2024 4:22:12 PM (IST)
தூத்துக்குடி விவிடி சிக்னல் மேம்பால பணியை விரைவில் தொடங்க வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட புதிய அலுவலகம் விஇ ரோடு சிவ பள்ளி அருகில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு மத்திய மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமை வகித்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் மறைந்த வணிகர்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் த.வெள்ளையன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தூத்துக்குடி விவிடி சிக்னல் மேம்பால பணியை விரைவில் தொடங்க வேண்டும். மழை காலம் துவக்கும்முன்பு மாநகரில் அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும்சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநகர தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாநில இனைசெயலாளர் திருப்பதி, மாநிலசெயற்குழு உறுப்பினர் முருகேசன், தெற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகநேரி சுந்தரலிங்கம், ஆழ்வை வட்டார தலைவர் முரளிகார்த்திக், ஆழ்வை கிழக்கு வட்டார தலைவர் அய்யம்பாண்டி, மத்திய மாவட்ட துணை தலைவர் பெஸ்கிராஜா, திருச்செந்தூர் வட்டார தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.