» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி : கனிமொழி எம்பி வழங்கினார்!

திங்கள் 9, செப்டம்பர் 2024 5:12:19 PM (IST)



தூத்துக்குடியில்  1,439 பேருக்கு 1,439 பேருக்கு ரூ. 11.62 கோடி கடனுதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் மேளா நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட கடன், மகளிர் சுயஉதவிக் குழு கடன், வீட்டு அடமானக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன், சிறுவணிகர் கடன், சிறு-குறு கடன் என மொத்தம் 1,439 பேருக்கு ரூ. 11.62 கோடி கடனுதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, வங்கி இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான பொ. நடுக்காட்டுராஜா, பொது மேலாளர் ப. சரவணன், முதன்மை வருவாய் அலுவலர் க. விஜயன், உதவிப் பொது மேலாளர்கள் சீனிவாசன், பூமிசெல்வி, வங்கி மேலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

inbaSep 10, 2024 - 08:08:46 AM | Posted IP 172.7*****

good

ManiSep 9, 2024 - 10:36:24 PM | Posted IP 162.1*****

ஐயா v o c பிறந்த நாள் விழாவிற்கு மாலை போட வரல..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory