» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாசன வாய்க்காலில் தூர் வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!

திங்கள் 9, செப்டம்பர் 2024 4:06:42 PM (IST)

மருதூர் கீழக்காலில் பாசன வாய்க்காலில் நிரம்பிய மண்ணை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது  தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தாமிரபரணி ஆழவார்கற்குளம், மருதூர் கீழக்கால் 25ல் நேரடி பாசனத்தில் கொங்கராயகுறிச்சி, தெற்கு தோழப்பப் பண்ணை பகுதி விவசாயிகள் 1500 ஏக்கரில் நெல், வாழை விவசாயம் செய்து வந்தார்கள். அப்பொழுது கடந்த டிசம்பர் மாதம் 17,18 தேதிகளில் பெய்த கனமழை வெள்ளத்தில் நேரடி மடை வாய்க்காலில் மண் நிரம்பி இருப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் வரமுடியாத நிலைமை இருந்து வருகிறது. 

இந்த வாய்க்காலில் நிரம்பிய மண்ணை தூர்வாரிட வேண்டுமென்று அப்பகுதி மக்கள் பொதுபணித்துரை அதிகாரியிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் பொதுபணி துறை இதை பற்றி கண்டு கொள்ளவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சித்தலைவர் தலையீடு செய்து இன்னும் இரண்டு மாதங்களில் விவசாயிகள் விவசாயம் செய்ய இருப்பதால் வாய்காலில் நிரம்பிய மண்ணை தூர்வாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory