» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் முற்றுகை!
திங்கள் 9, செப்டம்பர் 2024 3:34:33 PM (IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு மானாவரை விவசாயத்தை பாதுகாக்க மானாவரி விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 ஊக்க தொகை வழங்க வேண்டும் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் பயிர் காப்பீட்டு இழப்பீடு முறையாக வழங்கப்படாமல் உள்ளது. எனவே இதில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக பயிர் காப்பீடு இழப்பீடு முறையாக வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கப்பட வேண்டும் விவசாயிகளின் விலை பொருட்களை கூடுதல் விலைக்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.