» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 1¼ வயது குழந்தை பலி!
திங்கள் 9, செப்டம்பர் 2024 10:45:49 AM (IST)
சாத்தான்குளத்தில் தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து 1¼ வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தெற்கு காட்டன் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி விஜய் மனைவி அஸிமா (30). இந்த தம்பதிக்கு கிளிஸ் ஜேடன் என்ற 1¼ வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, எதிர்பாராத விதமாக தண்ணீர் நிரப்பியிருந்த பக்கெட்டில் தவறி விழுந்து மூச்சு திணறி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.