» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது!
ஞாயிறு 8, செப்டம்பர் 2024 11:15:49 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன், "சாதி மத பாகுபாட்டுடன் அதன் குறியீடுகளை பயன்படுத்துவோர் மீதும், சமூக நல்லிணக்கத்திற்கு விரோதமாக செயல்படும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
அதன்படி, ஸ்ரீவைகுண்டம் துணை கோட்ட அலுவலக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக வலைதளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (27) என்பவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரிவாளை பயன்படுத்தி சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கும் விதமான பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.
MarishkumarSep 8, 2024 - 01:01:25 PM | Posted IP 172.7*****