» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதமர் மோடியால் தமிழக மீனவர்களை விடுவிக்க முடியவில்லை: நாராயணசாமி பேட்டி

ஞாயிறு 8, செப்டம்பர் 2024 10:45:18 AM (IST)

இலங்கை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை பிரதமர் மோடியால் விடுவிக்க முடியவில்லை என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனியார் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தாா். அவர் கூறியதாவது: தமிழக மீனவர்கள் நமது பகுதியில் மீன் பிடித்தாலும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதை ஆகிவிட்டது. 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை 5 நாட்களில் திருப்பி கொண்டு வந்து விடுவோம். படகுகளையும் மீட்டு விடுவோம். ஆனால் பிரதமர் மோடி இலங்கை சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளைக் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக முதல்வர் மீனவர்கள் பிரச்சினை குறித்து பல முறை பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். பிரதமர் மோடியால் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியவில்லை. தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 

தமிழக அரசுக்கு எதிராகவும், அரசு கொண்டு வரும் திட்டங்களை விமர்சனம் செய்வதும், தமிழக அரசு திட்டங்களை மத்திய அரசோடு ஒப்பிட்டு அது பொருந்தாது எனக் கூறி வருகிறார். புதிதாக கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் எனது நண்பர். அவருக்கு என் வாழ்த்துக்கள். புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

யாருSep 8, 2024 - 01:58:14 PM | Posted IP 162.1*****

இந்த நாற வாயன் சாமி ?

VIJAYSep 8, 2024 - 11:23:38 AM | Posted IP 172.7*****

இந்த ஆமை வாயன் ஐ ரொம்ப நாளாக காணவில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory