» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நீட்டிப்பு : ஆட்சியர் தகவல்

சனி 27, ஜூலை 2024 11:25:07 AM (IST)

குமரி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை  31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு (Spot Admission) 16.07.2024 முதல் நடைபெற்று வருகிறது. தொழிற்பயிற்சி பயில விரும்புவோர் 31.07.2024 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும். பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் தொழில் 4.0 திட்டத்தின் கீழ் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில் நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் பொருட்டு இந்நிலையத்தில் 2023-ஆம் கல்வியாண்டு முதல் புதிதாக 1.) Advanced CNC Machining Technician 2) Industrial Robotics & Digital Manufacturing மற்றும் 3) Mechanic Electric Vehicle ஆகிய மூன்று தொழிற்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/-, (வருகைக்கேற்ப) பேருந்து கட்டண சலுகை, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக்கருவிகள், 2 செட் சீருடைகள் மற்றும் 1 செட் காலணிகள் போன்ற சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சேர்க்கை தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் முதல்வரை நேரில் அணுகவும். 9499055805, 04652-260463, 261463. அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளதால் அனைவரும் அரசு ITI-ல் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory