» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமய மாதா திருவிழா: 10 இடங்களில் வாகன நிறுத்தம் - எஸ்பி தகவல்!

சனி 27, ஜூலை 2024 10:01:18 AM (IST)

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு காவல் துறை சாா்பில் 10 இடங்களில் வாகன நிறுத்துமிட வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வ.உ.சி சாலை வழியாக வரும் வாகனங்கள்: தூத்துக்குடி வ.உ.சி. சாலை வழியாக வரும் வாகனங்கள் பழைய நகராட்சி அலுவலக சந்திப்பு, வடக்கு காட்டன் சாலை, ரயில் நிலைய சாலை வழியாக சென்று புனித பிரான்ஸிஸ் சேவியா் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், ரயில் நிலைய சாலை, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

தூத்துக்குடி வ.உ.சி. சாலை வழியாக பழைய நகராட்சி அலுவலக சந்திப்பு, தீயணைப்புதுறை சந்திப்பு, தெற்கு காட்டன் சாலை வழியாக சென்று புனித பீட்டா் கோயில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானம்மற்றும் தெற்கு காட்டன் சாலை, பிபிஎம்டி சந்திப்பு வழியாக சென்று ஜாா்ஜ் சாலையில் உள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தலாம்.

தருவை மைதானம் மற்றும் பிபிஎம்டி சந்திப்பு வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டுமற்றும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

வடக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள்: தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், முத்துநகா் கடற்கரையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், துறைமுகம் சமுதாய நலக்கூடம் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும்,

இந்திரா காந்தி சிலை சந்திப்பு, ரயில் நிலைய சாலை, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

தெற்கு கடற்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள்: தெற்கு கடற்கரை வழியாக வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் நிறுத்தலாம். மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

ஜாா்ஜ் சாலை வழியாக வரும் வாகனங்கள்: ஜாா்ஜ் சாலை வழியாக வரும் வாகனங்கள், ஜாா்ஜ் சாலையில் உள்ள தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், பிபிஎம்டி சந்திப்பு வழியாக சென்று ஜாா்ஜ் சாலையிலுள்ள சால்ட் ஆபீஸ் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், பிபிஎம்டி சந்திப்பு, தெற்கு காட்டன் சாலை வழியாக சென்று புனித பீட்டா் கோயில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், பிபிஎம்டி சந்திப்பு வழியாக சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம் என்றாா்.


மக்கள் கருத்து

TuticorianJul 29, 2024 - 02:39:05 PM | Posted IP 162.1*****

Road side shops and street vendors occupy most of the spaces on the roads leading to the church thus affecting parking lots to the people who really wanted to go to the church in their vehicles. Instead of forcing the devotees walk a long distance to reach the church, it would be better to keep the road side shops and street vendors at bay. Hope the authorities concerned and the Church will take appropriate action.

Karuppasamy RJul 28, 2024 - 03:45:53 PM | Posted IP 162.1*****

Good decision keep it up...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory