» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

வெள்ளி 26, ஜூலை 2024 3:02:07 PM (IST)



தூத்துக்குடியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்இளந்திரையன்   துவக்கி வைத்தார்.

சட்டத்திற்கு புறம்பான பொதை பொருட்கள்  இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அறக்கட்டளையோடு இணைந்து தொடர் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு (கூட்டு அறக்கட்டளை) சார்பில் தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

அரசினர் தொழிற்பயிற்சி நிலையயத்தின் முதல்வர் வா.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற பேரணிக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் டி. முத்துமாலை, அய்யனடைப்பு முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் ஆ. ஆதிநாராயணன், நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தின் இயக்குனர் அ.முத்துப்பாண்டியன், துளசி சோஷியல் டிரஸ்ட் இயக்குனர் எஸ். தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவரும், மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் படை உருப்பினருமான எம்.ஏ.தாமோதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 

சிறப்பு விருந்தினராக  தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.செந்தில்இளந்திரையன்  கலந்து கொண்டு போதைப் பொருட்களினால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், குற்றங்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது  அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இருந்து புறப்பட்டு கோரம்பள்ளம் ஊராட்சிமன்ற அலுவலகம், கைலாசபுரம் சாலை, இந்திராநகர் நான்கு தெருக்களின் வழியாக மீண்டும் தொழிற்பயிற்சி நிலையத்தை சென்றடைந்தது. 

இப்பேரணியில் தொழிற்பயிற்சி நிலைய உதவி இயக்குனர் ஏஞ்சல்,  முன்னால் காவல் உதவி ஆய்வாளர் ஐ. ஹென்சன் பவுல்ராஜ், சிகரம் அறக்கட்டளை இயக்குனர் பேய்குளம்  பி.முருகன், பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை நிர்வாகிகள் தா.முருகேஸ்வரி, ஏரல் ஏ. புஸ்பவேணி, எல் பாஸ் சமூகசேவை அறக்கட்டளை இயக்குனர் ராஜ்கமல் , சமூக ஆர்வலர் புதுக்கோட்டை ஜெயபால், மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நிறைவாக அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தின் உடற்கல்வி ஆசிரியரும் விடுதி கண்காணிப்பாளருமான  ஆர்.சுவர்கின் நேவிஸ் ஞானதுரை நன்றி கூறினார். நிகழ்சிக்கான ஒருங்கிணைப்பு பணியை தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்து இருந்தனர். பேரணி முடிவில் போதைப் பொருட்களின் புகைப்படங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஒப்பாரி வைத்து அடக்கம் செய்து, அனைவரும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory