» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் இந்திய தொல்லியல்துறையினர் அதிர்ச்சி!

வெள்ளி 26, ஜூலை 2024 12:07:32 PM (IST)



கல்மேடு அணைக்கட்டு பகுதியில் காணப்படும் புராதன வரலாற்று சிதைவுகளை ஆவணப்படுத்த வருகை தந்திருந்த இந்திய தொல்லியல் துறையினர் பொதுப்பணிதுறையினரின் அலட்சியத்தால் மிகுந்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். 

இது தொடர்பாக தூத்துக்குடியினை சேர்ந்த  தொல்லியல்ஆர்வலர் பெ.ராஜேஷ் கூறியதாவது "துத்துக்குடி—கல்மேடு பகுதியிலுள்ள கல்லாத்து அய்யன் கோவில் அருகிலுள்ள கல்லாறு அணையினை பலப்படுத்தி புணரமைக்கும் பணியானது பொதுப்பணித்துறை மூலமாக நடைபெறுவதை அறிந்து 16.05.2024 அன்று பார்வையிட சென்றதில் பழைய அணைக்கட்டினை சுற்றி சுமார் 10 அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்ததாகவும், 

அதில் மேல்புறம் பகுதியின் தெற்கு பகுதியில் சுமார் 200 அடி நீளத்திற்கு பழங்கால கற்களால் ஆன சிற்பங்களோடு கூடிய கட்டுமானங்கள் 6 – 10 அடி ஆழத்தில் காணப்பட்டதாகவும், இத்தகைய வரலாற்று சிதைவுகளை முறையாக தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி இந்த பகுதியின் வரலாற்று உண்மைகளை வெளி கொண்டு வர வேண்டி தூத்துக்குடி-மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பொதுப்பணித்துறை செயல்பொறியாளர் -தூத்துக்குடி அலுவலகத்திலும் கோரிக்கை மனுவினை உடனே காலம் தாழ்த்தாமல் 17.05.2024 அன்றே சமர்ப்பித்து ஏற்கனவே இதன் அண்டைய கிராமமான பட்டிணமருதூரில் இந்திய தொல்லியல் துறையினரின் தொடர் கள ஆய்வு விபரங்களை பகிர்ந்து இந்த பகுதியின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையினருக்கு முறையான ஆய்வு நடத்திடவேண்டி கடிதம் அனுப்பியிருந்ததாகவும், 

ஆகையால் முறையாக ஆய்வு முடியும் வரை அந்த 200அடி நீளமான மேற்கு பகுதியில் மேற்கொண்டு வரலாற்று சின்னங்களின் கள ஆய்விற்கு இடைஞ்சல்கள் ஏதும் ஏற்படாமல் மற்ற பகுதிகளில் கவனமாக பணியினை தொடர்ந்திட பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர், உதவி பொறியாளர், ஒப்பந்தக்காரர் (முகேஷ்) மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரிடமும் மாவட்ட ஆட்சியரின் இந்திய தொல்லியல் துறையினருக்கான கடிதத்தினை மேற்கோள் காட்டி வேண்டுகோள் வைத்திருந்ததாகவும், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தனக்கு உத்திரவாதம் அளித்திருந்ததாகவும், இந்நிலையில் 24.07.2024 அன்று காலை சுமார் 11:00 மணி அளவில் இந்திய தொல்லியல் துறை அதிகாரி மற்றும் உதவியாளர் சகிதம் தான் கல்மேட்டிற்கு கள ஆய்விற்காக சென்றிருந்ததாகவும் தெரிவித்தார்.

அங்கு மேற்படி 200அடி நீளமான தன்னால் 16.05.2024 அன்று புகைப்படங்கள் எடுத்து ஆவணப்படுத்தப்பட்ட பகுதியில் தென்மேற்கு மூலையிலுள்ள 40-50 அடி பகுதி மட்டும் பார்வையிடும்படி இருந்ததாகவும் மற்ற பிரதானமான 150-160 அடி பகுதிகள் பொதுப்பணித்துறையினரால் மூடி மறைக்கப்பட்டிருப்பதை கண்டு இந்திய தொல்லியல் துறை அதிகாரியும், தானும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி ஏமாற்றத்தோடு திரும்பியதாகவும், இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வித விளக்கமும் அளிக்காமல் அலட்சியம் செய்து வரலாற்று உண்மைகளை மறைக்க துணைபோவதாக தான் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே மாவட்ட ஆட்சியர் உடனே தலையிட்டு அவரது கடிதத்திற்கு மதிப்பளித்து ஆய்விற்காக வந்த இந்திய தொல்லியல் துறையினரை உதாசீனபடுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளை அறிவுருத்தி மீண்டும் அப்பகுதியினை தோண்டி கொடுத்து முன்கள ஆய்வு செய்ய உதவிட தொல்லியல் ஆர்வலர் மற்றும் மனுதாரர் என்ற முறையில் தனது கோரிக்கைகளையும், ஒருவேளை தாங்கள் ஓர்-இரு நாள் தாமதித்திருந்தால் மீதமுள்ள பகுதிகளும் மூடப்பட்டிருக்கும் என்ற தனது ஆதங்கங்களாக பதிவு செய்தார்.



மேலும் தாங்கள் இப்பகுதிக்கு தெற்கே ஊர் மக்கள் பூமியை தோண்டும்போது சில முதுமக்கள் தாழிகளை கண்டறிந்ததாக தகவல் தெரிவித்த சுமார் 15ஏக்கர் பரப்பு கொண்ட ‘தொட்டியக்குடி எனப்படும் சாம்பமண் ஏரியாவில்’ காணப்படும் அதிக அளவிலான மற்பாண்ட சிதைவுகளை மேற்பரப்பு கள ஆய்வில் கண்டதாகவும் இதுவும் இந்த பகுதிகளின் தொல்லியல் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகவும், இறுதியாக பட்டிணமருதூர் கண்மாயில் காணப்படும் மிக தொன்மையான குமிழ் தூம்பினையும் ஆவணப்படுத்திக் கொண்டதாகவும் கூடுதல் தகவல்களாக பதிவு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory