» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர்பவனி : ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

வெள்ளி 26, ஜூலை 2024 11:41:01 AM (IST)



ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழாவில் நேற்று தேர்பவனி கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயதிருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருனண ஆராதனையும் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி, காலை 5.10 மணி, காலை 5.50 மணி, காலை 7 மணிக்கும் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மிக்கேல் தூதர் முன் செல்ல ஆலயத் திருத்தேரில் மாதா கைகளில் குழந்தை இயேசுவை தாங்கியபடி காட்சியளித்தார். 

தொடர்ந்து புனித சந்தியாகப்பர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார். மாதாவும், சந்தியாகப்பரும் நான்கு ரத வீதிகளில் வீதியுலா வந்தனர். அப்பொழுது வழிநெடுகிலும் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உப்பு, மிளகு மற்றும் பூக்களை தூவியியும், பக்திபாடல்களை பாடியும் வானவெடிகளை வெடித்தும் வழிபாடு நடத்தினர்.

நூற்றுக்கணக்கானோர் முடிகாணிக்கை செலுத்தினர். .இதை தொடர்ந்து திருபயணிகளுக்காக பகல் 12 மணிக்கு சிறப்புத் திருபலியும், மாலை 6மணிக்கு ஆராதனையும் நடைபெற்றது. தேர்ப்பவனியில், மறைமாவட்ட பொருளாளர் பிரதீப், பங்குத் தந்தையர்கள் கப்புச்சின்சபை அமல உதயம், டி.எம்.எஸ்.எஸ்.எஸ். தூத்துக்குடி அமலன், ரஞ்சித் குமார் சர்டோசா, சூசைராஜ், ஜார்ஜ். சிராசியுஸ் மைக்கிள், உவரி கிங்ஸ்லின், வீரபாண்டியன்பட்டணம் பூமெல், இடிந்தகரை சைமன், செய்துங்கநல்லூர் ஜாக்சன், அகஸ்சீனியர் சபைவிஜி, விசுவாசம் மற்றும் மணப்பாடு, பெரியதாழை, உவரி, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, கூட்டபுளி, தூத்துக்குடி, அமலிபுரம், கூடுதாலை, கடலோர கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குருசுகோவில் ஆலய பங்குதந்தை பிளோவியன் பர்னாந்து மற்றும் அருட்சகோதரிகள், பங்குபேரவையினர், ஊர்நலக்கமிட்டியினர் உள்ளிட்டோர் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணிராஜ், பிரான்சிஸ் சேவியர், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory