» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்கள் தங்களது படங்களை வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம் : போலீஸ் அதிகாரி அட்வைஸ்!

வெள்ளி 26, ஜூலை 2024 9:45:38 AM (IST)



பெண்கள் தங்களது படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கமாண்டோ படை பிரிவு காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தெரிவித்தார்.

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி வளாகத்தில் மகளிர் மேம்பாட்டு மையத்தின் தலைவர் பேராசிரியை நீதா  மற்றும்  சாலை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பேராசிரியை அனிஸ்டா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியை நீதா வரவேற்புரை வழங்கினார். ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் சுப்புலட்சுமி (பொறுப்பு) வாழ்த்துரை வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  சிறப்புரையாற்றிய கமாண்டோ படை பிரிவு காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் மாணவிகளிடையே பேசியதாவது; நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கெல்லாம் காரணம் பெண்களாகிய நீங்கள் தான். ஒரு பெண் ஒரு பெண்ணிற்கு தாயாக இருக்கும் போது அந்த பெண்ணிற்கு நன்மைகளையே செய்கிறாள். அதே பெண்தான் ஒரு மாமியாராகவோ அல்லது நாத்தனாராகவோ ஒரு பெண் இருக்கும்போது கொடுமைகளை செய்து வருகிறார். ஒரே பெண்ணிற்கு இத்தனை பாகுபாடுகள் இருக்கின்றது. இந்த பெண்ணிற்கு எதிரான பெண்கள் இழைக்குமா கொடுமைகளை சரி செய்தாலே நாட்டில் பெண்ணிற்கு எதிரான 50 சதவீத குற்றங்கள் குறைக்கப்படும்.

தற்போது சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிரான பதிவுகள் அதிகமாக வெளியிடப்படுகின்றத பெண்கள் தங்களது படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதற்கு வரும் பாராட்டுகளை எண்ணி சந்தோசம் அடைகின்றனர். ஆனால் இதனால் வரும் தங்களுக்கு எதிரான கொடுமைகளை அறியாமல் பெண்கள் தங்களது படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர்.
சில சமூக விரோதிகள் தங்களுக்கு அதனை சாதகமாக பயன்படுத்தி அந்த பெண்களின் புகைப்படங்களை மாற்றி அமைத்து அதனை அந்தப் பெண்களிடம் காட்டி மிரட்டி வருகின்றனர். 

இதற்கு பெண்களாகிய நீங்கள் இடம் கொடுக்க வேண்டாம் அவ்வாறு தங்களை மிரட்டும் விரோதிகளை தங்களுடைய பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி சரி செய்ய முயலுங்கள் உங்களது பெற்றோர்கள் தான் உங்களுக்கு 100 சதவீத பாதுகாப்பை அளிக்க முடியும் எனவே மாணவிகள் நீங்கள் தெரியாமல் செய்யும் தவறுகளினால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தங்களுடைய பெற்றோர்களிடம் தைரியமாக எடுத்துக் கூறி அதனை சரி செய்து பாதுகாப்பாக இருங்கள். மாணவிகள் நீங்கள் எந்த ஒரு அறிமுகம் இல்லாத ஆண்களிடம் பழகவோ அவர்கள் அழைக்கும் இடத்திற்கு தனியாகவோ செல்ல முற்படாதீர்கள். அவர்கள் தான் உங்களுக்கு பலவித ஆசைகளைக் காட்டி உங்களை தங்களது வலையில் விழ வைத்து ஏமாற்ற முயற்சி செய்வார்கள்.

எனவே தாங்கள் விழிப்புணர்வாக இருங்கள். நீங்கள் உங்களுடைய தந்தை மற்றும் சகோதரர்களை தவிர வேறு எந்த ஆணுடனும்  தனியாக எங்கேயும் செல்லாதீர்கள். பெண்கள் நீங்கள் இடம் கொடுக்காமல் உங்களுக்கு எதிராக எந்த தவறும் நடைபெறாது. எனவே நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும். தற்பொழுது பெண்களுக்கு பயனுள்ள "காவலன்" செயலியை தங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அது எவ்வித  சூழ்நிலையிலும் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க தயாராக உள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பேசினார்.

மேலும், அவர் மாணவிகள் தங்களது இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது ஹெல்மெட் அணிந்து வரவும். இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிவது மிக அவசியமாகும். ஏதாவது ஒரு சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக தாங்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழும்போது தலையின் பின்புறத்தில் தான் காயம்பட்டு அதிகம் பேர் இறக்கின்றனர். எனவே தாங்கள் ஹெல்மெட் அணிவது முக்கியமாகும். ஹெல்மெட் அணியும் போது அதனுடைய பெல்ட் லாக்கை கண்டிப்பாக மாட்ட வேண்டும். ஏனென்றால் தவறி கீழே விழும் பொழுது உங்களுக்கு முன்பு ஹெல்மெட் உங்கள் தலையில் இருந்து கலந்து கீழே விழுந்து விடும் எனவே ஹெல்மெட் டின் லாக்கை கண்டிப்பாக மாட்டவும். 

இருசக்கர வாகனத்தில் மாணவிகள் பயணிக்கும் போது இருவருக்கு மேல் அமர்ந்து செல்ல வேண்டாம்.  மாணவிகள் அவசியம் இருசக்கர வாகன லைசென்ஸ் எடுக்கவும் கல்லூரிக்கு கிளம்பும் பொழுது மாணவிகள் நீங்கள் அவசரமாக புறப்பட்டு வேகமாக செல்லாமல் பத்து நிமிடங்களுக்கு முன்பாக புறப்பட்டு  நிதானமாக கல்லூரியை சென்றடையவும். அதுதான் பாதுகாப்பாக இருக்கும். மாணவிகள் உங்களுடைய பெற்றோர்கள் தான் உங்கள் மீது அக்கறையுடன் உங்களை வளர்க்க முடியும். எனவே தாங்கள் தங்களது பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.  நிகழ்ச்சியின் முடிவில் பேராசிரியர் அனிஸ்டா நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.


மக்கள் கருத்து

ada naan thaan daJul 26, 2024 - 12:59:54 PM | Posted IP 172.7*****

அருமையான அட்வைஸ் ... அதுபோல முதலில் அனைத்து காவலர்களும் சக மக்களை மனிதர்களாக பாருங்கள் , ஒருமையில் , கெட்ட வார்த்தையில், பொது வெளியில் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory