» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமய மாதா பேராலய திருவிழா கொடி பவனி

வியாழன் 25, ஜூலை 2024 8:50:45 PM (IST)



தூத்துக்குடியில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா நாளை  கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் சிறப்பு திருப்பலிக்கு பின்னர் மாதா உருவம்  பொறித்த கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

தூத்துக்குடியில் உலக புகழ் பெற்ற பனிமய  மாதா பேராலயத்தின் 442 ஆம் ஆண்டு திருவிழா நாளை ஜூலை 26 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதையொட்டி பனிமய மாதா பேராலயத்தில் இன்று மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நாளை திருவிழா துவங்குவதை முன்னிட்டு கொடிமரத்தில் ஏற்றப்படும் மாதா உருவம் பொறித்த கொடி மற்றும் காணிக்கை பொருட்கள் ஆலய வளாகத்தில் இருந்து பங்கு தந்தை ஸ்டார்வின் தலைமையில் ஊர்வலமாக நான்கு வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு பின்பு ஆலயம் வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மாதாவின் பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

நாளை ஜூலை 26 ஆம் தேதி காலை எட்டு மணி முதல் 9:00 மணிக்குள் கொடி மரத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கி 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory