» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாரின் முயற்சியால் தூத்துக்குடி கல்லூரியில் மாணவர்கள் மீண்டும் சேர்ப்பு!

வியாழன் 25, ஜூலை 2024 8:43:37 PM (IST)



தூத்துக்குடியில் கல்லூரியில் நீக்கம் செய்யப்பட்ட 2 மாணவர்களை போலீசாரின் முயற்சியால் மீண்டும் சேர்க்கப்பட்டதனால் உண்ணாவிரத போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சந்தன செல்வம், நேசமணி, அலெக்சாண்டர் ஆகிய 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிட்டது. 

உயர்த்தப்பட்ட சுயநிதி பிரிவு கட்டணத்தை குறைப்பது தொடர்பாக காமராஜர் கல்வி குழும உறுப்பினர்கள் மத்தியில் விவாதித்த பின்னர் அறிவிக்கிறோம் என கல்லூரி நிர்வாகம் கோட்டாட்சியர் மூலம் தகவல் தெரிவித்தனர். 

இந்நிலையில், தென்பாகம் சப்.இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ், ஏட்டு சுதாகர் பாலசிங், தனீபிரிவு ஏட்டு ராஜேஷ், ஆனந்த் ஆகியோர் மாணவர்களின் நிரந்தர நீக்கத்தை ரத்து செய்யுமாறு காமராஜர் கல்லூரி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து 3 மாணவர்களும் தங்கள் தவறை உணர்ந்ததால் மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். கல்லூரி நிர்வாகத்தின் முடிவால் உண்ணாவிரத போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.


மக்கள் கருத்து

WholeJul 28, 2024 - 12:46:42 AM | Posted IP 172.7*****

Tamilnadu

Sri HaranJul 28, 2024 - 12:46:21 AM | Posted IP 172.7*****

Enkita pesa pesa varanum

SRIHARANJul 28, 2024 - 12:45:19 AM | Posted IP 162.1*****

Kandan .......waste off issue

BaulrajJul 26, 2024 - 03:08:35 PM | Posted IP 172.7*****

It is good to see people fighting for a general cause.

Inimayavathu poi olunga padingadaJul 26, 2024 - 01:09:47 PM | Posted IP 162.1*****

inimayavathu poi olunga padingada..... matra manavargalai kedukkamal

நேசமணிJul 25, 2024 - 10:16:51 PM | Posted IP 162.1*****

செய்திகளை நன்கு கேட்டு அறிந்து பதிவிடவும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் இருந்து உண்ணாவிரத போராட்டமும் இருந்து மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இதை தவறாக காவல்துறையின் ஆதரவாள்தான் வெற்றி பெற்றது என்பது மிகவும் தவறானது காவல்துறை மாணவர்களுக்கு ஆதரவு அளித்தது அதில் எந்த தவறும் இல்லை இதில் காவல் துறையை பாராட்டுகிறோம் ஆனால் வெற்றிக்கு முதல் காரணமும் பெரிய காரணமும் மாணவர்களும் இந்திய மாணவர் சங்கத்தினர் மட்டுமே இதை தவறாக காவல்துறையின் ஆதரவால் மட்டும் தான் இந்த போராட்டம் வெற்றி பெற்றது என்பது மிகவும் தவறு மாணவர்கள் நான்கு வாரமாக அனைத்து துறைக்கும் மனு அளித்து போராட்டத்தை வெற்றி பெற்றுள்ளனர் இந்த செய்தி மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது தயவு செய்து இந்த செய்தியை உங்கள் முகநூலில் இருந்து முழுவதுமாக நீக்கி விடுங்கள்

NesamaniJul 25, 2024 - 10:14:24 PM | Posted IP 162.1*****

இந்திய மாணவர் சங்கத்தின் தொடர் போராட்டத் தலையை மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் காவல்துறை அதற்கு ஆதரவு தான் அளித்தது ஆனால் இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்தது மாணவர்களே ஒரு மாத போராட்டத்திற்குப் பிறகு மாணவர்கள் 25 7 2024 உண்ணாவிரத போராட்டம் இருந்து மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இதை காவல்துறை இன் ஆதரவாள் தான் வெற்றி பெற்றது என்பது மிகவும் தவறு இந்த வெற்றிக்கு காரணம் மாணவர்களும் இந்திய மாணவர் சங்கத்தினர் மட்டுமே

சுரேஷ் இசக்கிபாண்டி - மாவட்ட செயலாளர் (DYFI)Jul 25, 2024 - 10:04:11 PM | Posted IP 172.7*****

இந்திய மாணவர் சங்கம் சார்பில் அநியாய கல்வி கட்டணத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் முதலில் போராட்டம் நடத்தியது வஉசி கல்லூரி மாணவர் சங்க கிளை. அதன் பின்னர் வஉசி கல்லூரிக்கு 15 நாட்கள் itc போடப்பட்டு கல்லூரி நிர்வாகம் விடுமுறையை அறிவித்தது. அதன் பின்னர் இரண்டாம் கட்ட போராட்டத்தை துவக்கினார்கள் காமராஜ் கல்லூரியை சேர்ந்த இந்திய மாணவர் சங்க மாணவர்கள். இதனுடைய கல்வி கட்டணத்தை குறைக்க முடியாது அதிகாரியின் உத்தரவுகளை மதிக்க முடியாது என தான்தோன்றித்தனமாக நடந்தது காமராஜ் கல்லூரிகளுக்கும் இறுதியாக மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்கள் மேல் அவாண்ட பழி போட்டு நிரந்தர நீக்கம் செய்வதற்கான அனைத்து குறுக்கு வழிகளையும் செய்து வந்தது எனினும் மாணவர்கள் விடாப்படியாக போராட்டத்தை இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் நடத்தினார்கள் காவல்துறை நண்பர்களும் மாணவர்கள் சங்க போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து மாணவர்களோடு நின்றார்கள் இறுதியாக 20 நாட்களைக் கடந்து போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அரசு உதவி பெறக்கூடிய கல்லூரிகளில் கல்வி கட்டணம் எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்பது குறித்த இறுதி கட்ட முடிவு இதுவரை எட்டப்படவில்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory