» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் 2 நாள் உண்ணாவிரத போராட்டம் துவக்கம்

வியாழன் 25, ஜூலை 2024 5:34:26 PM (IST)



தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் 2 நாள் உண்ணாவிரத போராட்டத்தை இன்று துவங்கினர். 

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும். ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம்நிர்ணயம் செய்ய வேண்டும், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைககள்  வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. 

சங்க தலைவரும் துறைமுக ஆணையக்குழு உறுப்பினருமான எஸ்.பாலகிருஷணன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை சிஐடியு மாநிலச் செயலாளரும், அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சம்மேளனத்தின் செயலாளருமான ஆர்.ரசல் துவக்கி வைத்தார். 

சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.காசி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.முனியசாமி, சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.அப்பாதுரை, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.மாரியப்பன், உப்பு தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கே.சங்கரன், அனல்மின் நிலைய சிஐடியு செயலாளர் எஸ்.கணபதி சுரேஷ், அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் பிச்சைமணி, தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் சயெலாளர் ரவிதாகூர், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட பொருளாளர் ராமையா, துறைமுக முன்னாள் லேபர் டிரஸ்டிகள் ஜே.எம்.பி ராயன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

போராட்டத்தில் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், பிஎஸ்ஏசீகால் கண்டெயினர் டெர்மினல் தொழிலாளர்கள், கேண்டீன் தொழிலாளர்கள் என 100 க்கு மேற்பட்டதொழிலாளர்கள் பங்கேற்றனர். நாளை தொடரும் போராட்டத்தில் ஜனநயாக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் பி.பூமயில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.புவிராஜ் உள்ளிட்டோர்பங்கேறக் உள்ளனர். சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து போராட்டத்தை நிறைவு செய்து பேசுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory