» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கல்லூரி முன்பு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

புதன் 24, ஜூலை 2024 12:54:09 PM (IST)



தூத்துக்குடியில் கல்லூரி முன்பு நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்ட 2 மாணவர்கள் மீண்டும் சேர்க்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்வி கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பை கைவிட்டு கல்லூரிக்கு திரும்பினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சந்தன செல்வம், நேசமணி, அலெக்சாண்டர் ஆகிய 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களான நேசமணி மற்றும் சந்தன செல்வம் ஆகியோர் கல்லூரி முன்பு இன்று இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறை தலையிட்டு தங்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கல்லூரி முன்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

ada naan thaan daJul 26, 2024 - 11:47:54 AM | Posted IP 162.1*****

இந்த மூட்டா, Management டீம் பேராசிரியர்கள் போராட்டம் செய்யும் போது கல்லூரி நிர்வாகம் நவ துவாரம் பொத்தி வேடிக்கை மட்டுமே பார்க்கும்

BalamuruganJul 25, 2024 - 08:12:03 PM | Posted IP 172.7*****

மாவட்ட ஆட்சியர் என்ன செய்துகொண்டிருக்கிறார் உடனே மாணவர்கள் மீது அடக்குமுறையில் ஈடுபடும் நிர்வாகம்மீது உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் மாணவர்களின் எதிர்கால நலனை கருதி கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் . இதன் மூலம் கல்வி கொள்ளை தடுக்கப்படும்.

KumarJul 25, 2024 - 02:00:32 PM | Posted IP 162.1*****

College pona olunga padikanum....athai vitutu strike adichutu thirinju padikum manavargalin padippai kedukalama?

Csk SelvakumarJul 24, 2024 - 11:50:01 PM | Posted IP 172.7*****

அடக்கு முறை இதுதான்.போராட்டம் மட்டுமே நாட்டை முன்னேற்றி செல்லும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory