» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை 31ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

புதன் 24, ஜூலை 2024 12:48:08 PM (IST)

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை வருகிற  31ஆம் தேதிக்கு ஓத்திவைத்து நீதிபதி ஐயப்பன் உத்தரவு பிறப்பித்தார்

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்நிலையில் வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது வழக்கு விசாரணைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த பத்மநாதன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், மற்றும் அவரது தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகினர். இந்த வழக்கில் மொத்தம் 108 சாட்சிகள் அரசு தரப்பான லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சேர்க்கப்பட்டுள்ளது. 

இதில் இன்று வழக்கு விசாரணைக்காக தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ஆதி திராவிட நலத்துறை அலுவலராக பணிபுரிந்து  வருபவரும் வழக்குப்பதிவின்போது தூத்துக்குடியில் துணை வட்டாட்சியராக இருந்த சுரேஷ் மற்றும் தற்போது ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவரும்  வழக்குப் பதிவின்போது கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த மைதிலி ஆகியோரிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விசாரணை நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி ஐயப்பன் உத்தரவு பிறப்பித்தார்


மக்கள் கருத்து

மங்கி தூத்துக்குடிJul 27, 2024 - 09:15:21 PM | Posted IP 172.7*****

வாயாடி நீதிமன்றம் அப்படிதான் நீண்டுக்கொண்டே போகும்.

சங்கி தூத்துக்குடிJul 24, 2024 - 12:52:33 PM | Posted IP 162.1*****

தீர்ப்பை எப்பம் சொல்லுவாங்க. ஓரே டிரானஸ்பரா இருக்கு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory