» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தையை வெட்டிய பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

புதன் 24, ஜூலை 2024 7:47:34 AM (IST)

தந்தையை அரிவாளால் வெட்டிய பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்த அழகுவேல் மகன் ஆறுமுகபாண்டி (70). விவசாயியான அவர் தனது மகள் அமுதாவின் (37) நகைகளை அடகு வைத்து சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரத்தில் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அமுதா நகைகளைத் திருப்பிக் கேட்டபோது இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம்.

2022ஆம் ஆண்டு செப். 3ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆறுமுக பாண்டியை அமுதா அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த ஆறுமுகபாண்டி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செப். 6ஆம் தேதி உயிரிழந்தார். கொடுங்காயம் விளைவிக்கும் நோக்கத்துடன் தாக்கியது, ஆபாச வார்த்தைகளால் திட்டியது ஆகிய இரு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிந்து, அமுதாவைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி உதயவேலவன் விசாரித்து, அமுதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory