» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சத்துணவு திட்ட சமூக தணிக்கை சிறப்பு வார்டு சபாகூட்டம்!

திங்கள் 22, ஜூலை 2024 3:37:52 PM (IST)



தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சத்துணவு திட்ட சமூக தணிக்கை சிறப்பு வார்டு சபா கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு மாநில சமூக தணிக்கை சங்க அலகின் சார்பில் மாநில முழுவதும் உள்ள  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் 884 மையங்களில் 2 கட்டமாக சமூகதணிக்கை முடிவுற்றது. 3வது கட்டமாக தமிழகம் முழுவதும் 70 மையங்களில சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூகத் தணிக்கை வழிநடத்தும் குழுவினரால் கடந்த 15ம்தேதி தொடங்கி ஜீலை 22ம் தேதி நிறைவுற்றது.இதில் சமூக தணிக்கை வழி நடத்தும் குழுவினர் சமயலறை ஆய்வு, உணவின் தரம், பொருட்களின் இருப்பு விவரம்,பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்களிடம் நேர்காணல் செய்து சமூகத்தணிக்கை அறிக்கையினை தயார் செய்து சிறப்பு வார்டு சபா கூட்டத்தில் ஒப்புதல் பெற்றனர்.

சிறப்பு வார்டு சபா கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் செல்வம்மாரி தலைமை வகித்தார். சமூக தணிக்கைவட்டார வள பயிற்றுநர் சிவகுருநாதன், தலைமையாசிரியர் குருஸ் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக தணிக்கை வழி நடத்தும் குழு உறுப்பினர் பாஸ்டினா வரவேற்றார்.சமூகதணிக்கை மாவட்ட வள பயிற்றுநர் மணி கலந்து கொண்டு பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக கலந்துரையாடல் செய்தார்.

இதில் சமூகத் தணிக்கை வழி நடத்தும் குழுவினர்கள் ஜெயரூபிலாரன்ஸ், சரண்யா, சுகன்யா, மரிய ஆரோக்கிய பிரின்ஸி, சிலுவை பார்பிராள்பெனிலா, பெற்றோர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் சத்துணவு திட்ட  அமைப்பாளர் சுகந்தி அமிர்த ஜெயா நன்றி கூறினார். இதேபோல் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு வார்டு சபா கூட்டத்தில் சத்துணவு திட்ட சமுக தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory